சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

மனைவியை தாக்கியவர் கைது

திருவாலங்காடு: திருவாலங்காடு அடுத்த, பெரியகளக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் மனைவி கலையரசி, 28.இந்நிலையில், நேற்று, கணவன், மனைவிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத், இரும்பு கம்பியால் மனைவி கலையரசியை தாக்கினர். படுகாயமடைந்த கலையரசியை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, திருவாலங்காடு போலீசில், கலையரசி அளித்த புகாரையடுத்து, போலீசார், கோபிநாத், 32, என்பவரை கைது செய்தனர்.

டாஸ்மாக் கடையில் திருட்டு

நகரி: சித்துார் மாவட்டம், நாகலாபுரம் அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமம் அருகே, டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, டாஸ்மாக் கடையின் மேற்கூரையை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே குதித்து, அங்கிருந்த, 91 ஆயிரத்து, 220 ரூபாய் ரொக்கம், 33 ஆயிரத்து, 580 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.நாகலாபுரம் போலீசில், கடையின் மேற்பார்வையாளர் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் வியாபாரி பலி

நகரி: சித்துார் மாவட்டம், பி.கொத்தகோட்டா டவுன் பகுதியில், வேன் மூலம் காய்கறி வியாபாரம் செய்து வந்தவர் ரஸ்மாம்ஜீ,45. இவர், நேற்று முன்தினம், தின்னமிதப்பள்ளியில் வேனில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். சாலையோரம் நின்று, வியாபாரம் செய்துக் கொண்டிருந்த ரஸ்மாம்ஜீ மீது, இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பி.கொத்தகோட்டா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

நகரி: சித்துார் மாவட்டம், நிம்மனப்பள்ளி அடுத்த, ஏர்ப்பகாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கல்வராயன்,38. விவசாயி. இவர், நேற்று முன்தினம் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கினார். அப்போது மின்சாரம் பாய்ந்து செங்கல்வராயன் படுகாயம் அடைந்தார். மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செங்கல்வராயன் இறந்தார். நிம்மனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி மோதி ஒருவர் பலி

நகரி: சித்துார் மாவட்டம், புங்கனுார் அடுத்த, கொத்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அபிபுல்லா,32. இவர், நேற்று முன்தினம், நண்பருடன், ஸ்பிளன்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது, இந்திரா நகர் கூட்டுச்சாலையில் எதிரே வந்த தண்ணீர் டேங்கர் லாரி, இவர்கள் வந்த, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், அபிபுல்லா சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது நண்பர் மஸ்தான், லேசான காயத்துடன் தப்பினார். புங்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X