23 நாளில் 40 ஆயிரம் பேர் பாதிப்பு கொரோனாவால் 621 பேர் உயிரிழப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

23 நாளில் 40 ஆயிரம் பேர் பாதிப்பு கொரோனாவால் 621 பேர் உயிரிழப்பு

Added : ஜூன் 23, 2020
Share

சென்னை; ரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், இம்மாதத்தில் மட்டும் இதுவரை, 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 621 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் முதன் முறையாக, மார்ச், 7ல், ஓமன் நாட்டில் இருந்து வந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு, கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அம்மாதத்தில் மட்டும், 74 பேர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது. டில்லியில் நடந்த மதரீதியான மாநாட்டில் பங்கேற்றவர்களால், அதிக தொற்று பரவியது.

இதன் காரணமாக தொற்று அதிகரித்து, ஏப்ரல் மாதத்தில், 2,323 பேர் பாதிக்கப்பட்டு, 27 பேர் உயிரிழந்தனர். சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், கோயம்பேடு தொற்று காரணமாக பெரிய அளவிலான பாதிப்பு, மாநிலம் முழுதும் ஏற்பட்டது.

அதனால், மே மாதத்தில் மட்டும், 20 ஆயிரத்து, 10 பேருக்கு தொற்று அதிகரித்ததுடன், 146 பேர் இறந்தனர்.மூன்று மாதங்களை காட்டிலும், இந்த மாதத்தில், 39 ஆயிரத்து, 754 பேர் பாதிக்கப்பட்டு, 621 பேர் உயிரிழந்துஉள்ளனர். இந்த மாதம் உச்சகட்ட பாதிப்பு மாதமாக கருதப்படுகிறது. இந்த பாதிப்பு, இம்மாத இறுதியில், 50 ஆயிரமாக உயரவும் வாய்ப்பு உள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X