பொது செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ரூ.1,737 கோடி ஒதுக்கீடு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சிகளில், காற்று தர மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த, 1,737 கோடி ரூபாயை ஒதுக்க, 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது

.இதுதொடர்பாக, நிதிக்குழு இயக்குனர், பி.குமார் சிங், தமிழக தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாநகராட்சிகளுக்கு மொத்தமாக, 556 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, 1,181 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாநகராட்சிகளில், காற்று தர மேம்பாட்டுக்காக, 233 கோடி ரூபாயும், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்காக, 323 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுஉள்ளது. இந்த நிதி, 2020 முதல், 2025 வரை பயன்படுத்த அனுமதிக்கப்படும்.மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை, இதன் பயன்பாட்டை கண்காணிக்கும் அமைப்புகளாக இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு திட்ட பணிகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த விபரங்களை, நிதிக்குழுவுக்கு, மாநில அரசு அனுப்ப வேண்டும்.நிதி குழு வழிகாட்டுதல்கள் அடிப்படையில், இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும். பயன்பாடு அடிப்படையில் தான், அடுத்தடுத்த கட்ட நிதி விடுவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
-- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X