பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகள் பஸ்சில் ஏறுவதால் நடத்துனர்கள் கலக்கம்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சென்னை; அரசு பஸ்களில் கொரோனா நோயாளிகள் ஏறுவதால், நடத்துனர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளோர், அரசு பஸ்களில் பயணித்து, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.

பரிசோதனை

பரிசோதனையில், இவர்களில் பலருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், நடத்துனர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.இது குறித்து, நடத்துனர்கள் கூறியதாவது:கடலுார் மாவட்டம், வடலுார் பகுதியை சேர்ந்த தம்பதியர், அரசு மருத்துவமனையில், கொரோனா பரிசோதனைக்காக, சளி மாதிரியை கொடுத்து விட்டு, பல்வேறு பணிகளுக்காக அரசு பஸ்களில் பயணித்துள்ளனர். நேற்று முன்தினமும் அவர்கள், காடாம்புலியூரில் இருந்து, அரசு பஸ்சில் கடலுாருக்கு திரும்பினர். அப்போது, சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களை தொடர்பு கொண்டனர். 'உங்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகிஉள்ளது; மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லுங்கள்' என, அறிவுறுத்தினர்.

அச்சம்

இதையறிந்த பயணியர், அலறியடித்தபடி அந்த பஸ்சில் இருந்து இறங்கினர். சற்று நேரத்தில் வந்த, மாற்று பஸ்சில் ஏறி பயணித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், தங்களுக்கும் கொரோனா பரவும் என்ற அச்சத்தில், அரசு பஸ்நடத்துனர்கள் கலக்கமடைந்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X