மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் தொற்று அதிகரிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் தொற்று அதிகரிப்பு

Added : ஜூன் 23, 2020
Share

ராமநாதபுரத்தில் தினமும்கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு சுகாதாரமின்மையும், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது காரணம்.

தும்மல், இருமல் மூலமும்,சளி, எச்சிலை கண்ட இடத்தில் துப்புவதாலும் கொரோனா தொற்று அதிகம் பரவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல்,மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவதால் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மக்கள் தப்பிக்கலாம். ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இந்த விதிமுறைகள் காற்றில் பறக்கின்றன. பல வர்த்தக நிறுவனங்களில் சோப்பு போட்டு கை கழுவும் நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விட்டது.

அரசு பஸ்களில் கண்டக்டர்கள் பயணிகளிடம் மாஸ்க் அணிய வற்புறுத்துவது இல்லை. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை பஸ்ஸ்டாப், புதிய பஸ்ஸ்டாண்ட் வெளிப்புற பஸ்ஸ்டாப், அதன் எதிரில் உள்ள டீக்கடை பகுதி, ரோமன் சர்ச் பஸ்ஸ்டாப், பாரதிநகர் பஸ்ஸ்டாப், அரண்மனை, சென்டர் கிளாக் பகுதி, கேணிக்கரை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சிலர் எச்சில் துப்புகின்றனர்.

பொதுஇடத்தில் எச்சில் துப்புவோருக்கு அபராதம் விதிக்கும் முறையை ராமநாதபுரத்தில் மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த வேண்டும். நகராட்சி, சுகாதாரத்துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.ராமநாதபுரம் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் (ஓய்வு) டாக்டர் சாதிக் அலி கூறுகையில், சளி, எச்சிலை கண்ட இடங்களில் துப்புவது எப்போதும் ஆபத்தானது. காச நோய்க்கு இதுவே மூல காரணம்.

தற்போது கொரோனா பரவி வரும் நிலையில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். காரணம் சளி, எச்சிலில் குறைந்தது 8 மணி நேரமாவது கொரோனா வைரஸ் கிருமிகள் உயிர் வாழும். மேலும், முகக்கவசம், சமூக இடைவெளி அவசியமானது,' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X