பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் அவகாசம் தர ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சென்னை; 'கட்டுமான பணிகளை முடிக்க, கூடுதல்அவகாசம் வேண்டும்' என, அரசிடம் ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுப்பணி துறையின் கட்டடங்கள் பிரிவு வாயிலாக, அரசு மருத்துவமனைகள், ரேஷன் கடைகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட, பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. நீர்வளத்துறை வாயிலாக, அணைகள் புனரமைப்பு, தடுப்பணை, கதவணைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.

கொரோனா பரவல் காரணமாக, மார்ச்சில் நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த ஜார்கண்ட், பீஹார், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநில தொழிலாளர்கள் பலரும், சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். ஊரடங்கு விதிகளில் தளர்வு கிடைத்தவுடன், கட்டுமான பணிகளில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கட்டுமான இடங்களிலேயே, தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு, பணி மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், கட்டுமான தொழிலாளர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. அதனால், குறித்தகாலத்திற்குள் பணிகளை முடிக்க முடியாத நிலைக்கு, பல ஒப்பந்ததாரர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, பணிகளை முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என, தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்களிடம், ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம், முதல்வர் இ.பி.எஸ்.,கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக உரிய உத்தரவை, முதல்வர்விரைவில் பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X