பொது செய்தி

இந்தியா

விரைவு வகைக்கு மாறும் 13 பயணியர் ரயில்கள்

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தமிழகத்தில், முதல் கட்டமாக, 13 பயணியர் ரயில்கள், விரைவு ரயில்களாக மாற்றப்படுகின்றன. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், 200 கி.மீ.,க்கு மேல் இயக்கப்படும் ரயில்களை, எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற, ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, தெற்கு ரயில்வே எல்லைக்குள், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில், 200 கி.மீ.,க்கு மேல் இயக்கப்படும் பயணியர் ரயில்களை, எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற, வாரியம் உத்தரவிட்டுள்ளது.அதனால், மயிலாடுதுறை -- திருநெல்வேலி, திருச்சி -- ராமேஸ்வரம், புதுச்சேரி -- திருப்பதி, பாலக்காடு டவுன் -- திருச்சி, விழுப்புரம் - - மதுரை இடையே, இரு வழியிலும் இயக்கப்படும், 10 பயணியர் ரயில்கள். மற்றும், விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும், இரண்டு பயணியர் ரயில்கள்; திருப்பதியில் இருந்து விழுப்புரத்துக்கு இயக்கப்படும் ஒரு பயணியர் ரயில் என, முதல் கட்டமாக, 13 பயணியர் ரயில்கள், விரைவு ரயில்களாக மாற்றப்பட உள்ளன.

இந்த ரயில்கள் எல்லாம், 200 கி.மீ.,க்கு மேல், 334 கி.மீ., வரை இயக்கப்படுபவை. எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படும் போது, வேகமும் அதிகரிக்கப்படும். இதற்கான முறையான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.
- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
24-ஜூன்-202009:57:49 IST Report Abuse
RADE அருமை நன்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X