கொரோனா சிகிச்சை வார்டாகிறது பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை வார்டாகிறது பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி

Added : ஜூன் 23, 2020
Share

பரமக்குடி:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களை பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்கசிறப்பு கவனிப்பு நிலையமாக மாற்றும் பணி நடந்துவருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற் றால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.ஆரம்ப கட்டத்தில் ராம நாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிவ கங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் சிசிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதி கரித்ததால் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட சில அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை யிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், தொற்றால்பாதித்தவர்கள் 300க்கும் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை அளிக்க போதிய இடவசதியின்றி மருத்துவமனைகள்நிரம்பியுள்ளன. தொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவுப்படி, பரமக்குடிஅரசு கலைக் கல்லூரிகொரோனா சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றும் பணி துரிதமாகநடக்கிறது. 132 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X