பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சாயத்துராஜ் சட்டத்தை அமலாக்க வலியுறுத்தல்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பெரியசாமி, செயலாளர் நாகரத்தினம்,பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 53 ஊராட்சி தலைவர்கள்கலெக்டர் வீரராகவ ராவிடம் அளித்த மனு:

மூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை தனி அலுவலர்கள் கவனித்தனர். அப்போது தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், 14வது நிதிக்குழு மானிய நிதி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு திட்டங்களில் பணிகளை தேர்வு செய்தல், ஒப்பந்தம் கோருதல், உள்ளிட்ட பணிகளை ஒன்றிய நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பேக்கேஜ் முறையில் டெண்டர் விடப்பட்டு பணி நடந்தது.

தற்போது தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தனி அலுவலர் பதவி காலாவதியாகி விட்டது. எனினும் அதே நடைமுறை தொடர்கிறது.இதன் மூலம் 1994 பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கிய அதிகாரம் பறிக்கப்படுகிறது. கையெழுத்திடும் அதிகாரம் கூட இல்லை.

ஊராட்சி மூலம் டெண்டர் விட்ட பணிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் விடப் படுகிறது.இதன் மூலம் ஊராட்சி தலைவர்கள் அதிகாரம் பறிக்கப்பட்டு முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X