பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவுக்கு பதிலாக பணம்: மாணவர் வங்கி கணக்கு சேகரிப்பு

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை; சத்துணவு மாணவர்களுக்கு, உணவு செலவை, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்காக, மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்களை சேகரிக்கும்படி, ஆசிரி யர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்த தகவல் எதுவும், சத்துணவு பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படாததால், அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஒதுக்கீடுதமிழக அரசின், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும், சத்துணவு திட்டத்தில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இலவச சத்துணவு வழங்குகிறது. இதனால், 55 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். இவர்களில், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவனுக்கும், பருப்பு சாதம் வழங்க, ஒரு நாளைக்கு, தலா, 1.75 ரூபாயும், கலவை சாதம் வழங்க, தலா, 2.28 ரூபாயும் வழங்கப்படுகிறது.அதேபோல, ஆறு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும், பருப்பு சாதம் வழங்க, தலா, 1.89 ரூபாய், கலவை சாதத்துக்கு, 2.42 ரூபாய் வழங்கப்படுகிறது.இந்நிலையில், மார்ச், 16 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு உள்ளது. ஆனாலும், அந்தந்த மாத ஒதுக்கீட்டின்படி, சத்துணவுக்கான ரேஷன் பொருட்கள், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன; அவை காலாவதியாகும் நிலையில் உள்ளன.

இதற்கிடையில், 'சத்துணவு பொருட்களையோ அல்லது விடுமுறை நாட்களின் உணவுக்கான தொகையையோ, மாணவர்களுக்கு வழங்கலாம்' என, சமூக நலத்துறை அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதற்கான அரசாணை, விரைவில் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உத்தரவுஇந்நிலையில், மாவட்ட கல்வி அதிகாரிகளின் வழியாக, பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கு வந்துள்ள உத்தரவில், சத்துணவு மாணவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை சேகரித்து அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது. அதேநேரம், சமூக நலத்துறையிடம் இருந்து, சத்துணவு ஊழியர்களுக்கு, எவ்வித உத்தரவும் வரவில்லை. அரசின் இந்த குளறுபடி யால், ஆசிரியர்களும், சத்துணவு ஊழியர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூன்-202009:11:20 IST Report Abuse
Bhaskaran Maanavargalukku samaithupodum velayum illaathu thandasambalam vaanguvaargal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X