சென்னை; தமிழகத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இயக்கப்படும் அரசு பஸ்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்படுகிறது.
தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில், அரசு மற்றும் தனியார் பஸ்கள், குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து, சொந்த ஊர்களுக்கு திரும்புவோரில் பலருக்கு, கொரோனா தொற்று உள்ளதால்,
தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதையடுத்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை, கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து, வெளிநபர்கள் வராமல் கட்டுப்படுத்துகின்றனர்.இந்நிலையில், மக்களின் போக்குவரத்தும் கணிசமாக குறைந்துள்ளதால், பஸ்களில் பயணியரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனால், பஸ்களின் எண்ணிக்கையையும், அந்தந்த கிளை மேலாளர்கள் குறைத்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் அலுவலக, தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டுமின்றி, ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனாலும், பல்வேறு பணிமனைகள் மூடப்பட்டு, பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கையும், நடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE