பொது செய்தி

தமிழ்நாடு

துணை முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
சென்னை; துணை முதல்வர் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தலைமை செயலகத்தில், 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சமீபத்தில், முதல்வரின் தனி செயலர் தாமோதரன், கொரோனா பாதிப்பால் இறந்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், துணை செயலர் உட்பட,

சென்னை; துணை முதல்வர் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தலைமை செயலகத்தில், 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சமீபத்தில், முதல்வரின் தனி செயலர் தாமோதரன், கொரோனா பாதிப்பால் இறந்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், துணை செயலர் உட்பட, 10க்கும் மேற்பட்டோருக்கு, நோய் தொற்று உறுதியானது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்ற ஊழியர்களும், இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவினர் முதல் ஐந்து நாட்கள், அடுத்த பிரிவினர் அடுத்த ஐந்து நாட்கள் என, பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சில ஊழியர்களுக்கு, இரண்டு நாட்கள் வேலை; இரண்டு நாட்கள் ஓய்வு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில், துணை முதல்வர் அலுவலக ஊழியர்கள், 20 பேருக்கு, நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு, ஏற்கனவே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X