பத்திரப் பதிவுக்கு வருவோருக்கு, காய்ச்சல், மூச்சு திணறல் இருக்கிறதா என கண்டறிய, சார் பதிவாளர் அலுவலகங்களில், சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஊரடங்கு அமலில் இருந்தாலும், சார் பதிவாளர் அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன. 'இ - பாஸ்' கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்கப்பட்டதால், பத்திரப்பதிவுக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதேசமயம், கொரோனா தொற்று உள்ளவர்கள், சார் பதிவாளர்அலுவலகங்களுக்குள் வந்து விடாமல் இருக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்காக, உடல் வெப்பம் கண்டறிய, தெர்மோ மீட்டர், மூச்சு திணறலை கண்டறிய, பல்ஸ் ஆக்சி மீட்டர் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.சேலம், கோவை, தஞ்சை மண்டலங்களில் பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில், இந்த கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வருவோர், இக்கருவிகள் வாயிலாக பரிசோதிக்கப்படுகின்றனர்.உடல் வெப்பம் அதிகமாக இருந்தாலோ, மூச்சு திணறல் இருப்பது தெரிய வந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர் பத்திரப் பதிவுக்கு அனுமதிக்கப்பட மாட்டார். இதனால், சார் பதிவாளர் அலுவலகங்களில், பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
- - நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE