கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்திய ஐகோர்ட்டில் மின்சார வாரியம் தகவல்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சென்னை; 'சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், 75 சதவீதம் பேர் மின் கட்டணம் செலுத்தி விட்டனர்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மின் வாரியம் தெரிவித்தது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் சி.ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், மார்ச், 25ல் இருந்து, ஜூலை, 5 வரையான கால கட்டத்தில், மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், ஜூலை, 6 வரை வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு, ஜூன், 15 வரை வழங்கப்பட்டது.நான்கு மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களுக்கும், ஜூலை வரை நீட்டிக்காதது சரியல்ல. ஊரடங்கு காலத்தில், பலர் வேலை இழந்துள்ளனர். அவர்களால், மின் கட்டணம் செலுத்துவது கடினம்.

எனவே, ஜூலை வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராஜேஷ் ஆஜரானார்.மின்வாரியம் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்த, ஜூலை, 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களுக்கு, ஜூன், 15 என்று நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, 75 சதவீதம் பேர், மின் கட்டணம் செலுத்தி விட்டனர். ஜூன், 15க்கு பின் செலுத்துபவர்களுக்கு, இணைப்பு துண்டிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, வழக்கறிஞர்களின் வாதங்களுக்காக, விசாரணையை, வரும், 29ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X