கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' வகுப்பால் கண் பாதிப்பா? அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு!

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சென்னை; - மொபைல் போனில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்துவதால், மாணவர்களின் விழித்திரை பாதிக்கப்படுமா என்பது குறித்து, சென்னை கண் மருத்துவமனை முதல்வர் அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் விமல் மோகன் தாக்கல் செய்த மனு:தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு, ஸ்மார்ட் போன், மடிக்கணினி வாங்கி கொடுக்க வேண்டியுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள், தினசரி ஆறு மணி நேரம், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தினமும் பல மணி நேரம், மொபைல் போனை குழந்தைகள் பார்த்தால், கண் விழித்திரை பாதிக்கும். இந்த கல்வியாண்டில், பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து, ஆய்வு நடக்கும் போது, தேவையின்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.எனவே, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்த, தடை விதிக்க வேண்டும்.

ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, தினமும், இரண்டு மணி நேரம் மட்டுமே, ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும். ஆன்லைன் பாடங்களை, கணினி, மொபைல் போனில் பார்ப்பதால், மாணவர்களின் விழித்திரை பாதிக்கப்படுமா என்பது குறித்து அறிக்கை பெற வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் வகுப்புகளால், மாணவர்களின் விழித்திரை பாதிக்கப்படுமா என்பது குறித்து, சென்னை கண் மருத்துவமனை முதல்வர் அறிக்கை அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X