அரசியல் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
 கலெக்டர்களுடன் இன்று  முதல்வர் ஆலோசனை

சென்னை; கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., இன்று மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகம் முழுதும், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு அமலில் உள்ளது.எனினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, நோய் பரவல் அதிகம் உள்ள, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், வாகன போக்குவரத்துக்கும், கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரித்து வருவதை தடுக்க, 19ம் தேதியில் இருந்து, வரும், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நேற்று முதல், மதுரையிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட, பல மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. எனவே, அந்த மாவட்ட நிர்வாகங்களும், முழு ஊரடங்கு அறிவிக்கும்படி, அரசிடம் கோரியுள்ளன.இந்த சூழ்நிலையில், இன்று காலை, 10:00 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இக்கூட்டத்தில், தலைமை செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், தற்போது கொரோனா நோய் பரவல் நிலை, பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளன.

முதல்வர் நாளை கோவை பயணம்!முதல்வர், இ.பி.எஸ்., நாளை கோவை செல்கிறார். நாளை காலை, 10:00 மணிக்கு, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், கொரோனா நோய் தடுப்பு பணிகள், அத்திக்கடவு -- அவினாசி நீரேற்றும் திட்டப் பணிகள் குறித்து, முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.

பின், அத்திக்கடவு- - அவினாசி நீரேற்றும் திட்ட பணிகளை, நேரில் கள ஆய்வு செய்ய உள்ளார்.நாளை மறுதினம், 26ம் தேதி திருச்சி செல்கிறார். அங்கு காலை, 10:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும், வளர்ச்சி திட்டப் பணிகள், கொரோனா நோய் தடுப்பு பணிகள், முக்கொம்பு கதவணை கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்கிறார். அதன்பின், காவிரி ஆற்றின் குறுக்கே, முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகளை, நேரில் பார்வையிடுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X