ஊராட்சி தலைவர்களுடன் அமைச்சர் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவர்களுடன் அமைச்சர் ஆலோசனை

Added : ஜூன் 23, 2020
Share
 ஊராட்சி தலைவர்களுடன் அமைச்சர் ஆலோசனை

சிவகாசி:சிவகாசியில் கொரோனா தடுப்பு தொடர்பாக ஊராட்சி தலைவர்களுடன் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆலோசனை நடத்தினார்.

சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இதில் கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பேசியதாவது: கொரோனா நிவாரணம், தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளில் தண்ணீர் வினியோகம் தங்குதடையின்றி நடக்கிறது. ஆழ்துளை கிணறுகள், மேல்நிலை தொட்டி பழுது பார்க்கும் பணிகளும் நடக்கிறது.

குடிநீர் தட்டுப்பாடு குறித்து எனது கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். அறங்காவலர்குழு தலைவர் பலராம், ஊராட்சி தலைவர்கள் லட்சுமிநாராயணன், உசிலைசெல்வம், நாகராஜன், கவிதா கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X