பொது செய்தி

தமிழ்நாடு

புலிப்பாய்ச்சலில் சுற்றுலா மீண்டெழும்!

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Coronavirus pandemic, tourism sector, crisis in India, india tourism

கொரோனாவால் உலகமே அச்சத்துடன், ஆபத்தில் சிக்கி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.உலகிலேயே, கொரோனாவால் அதலபாதாளத்திற்கு சென்ற முதல் துறை, சுற்றுலாத் துறை. கொரோனா காலத்திற்கு பின், கடைசியாகத் தான் சுற்றுலாத் துறை உயிர்த்தெழும் என, பல வல்லுனர்களும், நிபுணர்களும் சொல்கின்றனர்.

ஆனால், அதில் எள்ளளவும் உண்மை இல்லை. முதன் முதலில் எழுச்சி பெறப் போவது, சுற்றுலாத் துறை தான். உலகளவிலோ, இந்திய அளவிலோ என்னால் கூற முடியாது; தமிழக அளவில், சுற்றுலா உச்சத்தை எட்டும்.


தயக்கம்கொரோனா இந்தியாவில் தலைகாட்ட ஆரம்பித்த முதல் வாரத்தில், விமானங்கள் ஓடிய போதும், விமானங்களில் சுற்றுலா செல்ல அனைவரும் தயங்கினர். பயணங்களை ரத்து செய்து, முகவர்களிடம் பணம் கேட்டு, நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.இந்திய அளவில், 15 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை திருப்பித்தர முடியாது என உறுதியாக கூறி விட்டன, விமான நிறுவனங்கள். இதனால், முகவர்கள் செய்வதறியாது திகைத்து, விழி பிதுங்கி நின்றனர்.விமான நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெற்று தருமாறு, 'டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன்' அமைப்பை, தமிழ்நாடு சுற்றுலா பயணியர் விருந்தோம்பல் சங்கம் அணுகியது. 'டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன்' சார்பில், விமான நிறுவனங்களை அழைத்து பேசினர்.

இதன் விளைவாக, கடன் இருப்பில் பணத்தை வைத்திருப்பதாகவும், அதிலிருந்து முகவர்கள், ஒரு வருட காலத்துக்குள் டிக்கெட்களாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதனால், முகவர்கள் நிம்மதி அடைந்தனர். இருப் பினும், வாடிக்கையாளர்களோ உடனடியாக பணம் வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர். விவகாரம், உச்ச நீதிமன்றத்துக்கு சென்றதை அடுத்து, மூன்று வார காலத்துக்குள், மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம், விமான நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, முகவர்களுக்கு பணமாக கிடைக்க வழி வகை செய்யவும் என, வழிகாட்டியது.


உறுதியாக நம்பலாம்கம்போடியா, தாய்லாந்து, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகள், கொரோனாவில் இருந்து விடுபட்டும், விடுபட்டுக் கொண்டும், சுற்றுலாவை மேம்படுத்த அடியெடுத்து வைத்திருக்கின்றன. சர்வதேச சுற்றுலாவினர் வெளிநாடுகளுக்கு செல்வதும், வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு வருவதும் நடக்க, இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகலாம். அதாவது, 2021 ஆகும். ஆனாலும், சர்வதேச சுற்றுலா பயணியரின் கவனம், இந்தியாவை நோக்கி தான் உள்ளது என்பதை உறுதியாக நம்பலாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக, வெளிநாட்டினர் சுற்றுலா வருகை மற்றும் உள்நாட்டினர் சுற்றுலா வருகை ஆகியவற்றில், இந்திய அளவில், தமிழகமே முதலிடம் பெற்றுள்ளது. வட மாநிலங்களில் உள்ள அதிகளவு சுற்றுலா பயணியர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி நோக்கி படையெடுப்பதே, தமிழகம் முதலிடம் வகிக்க காரணமாகும்.


உச்சம் பெறும்கொரோனா காலத்தில், மக்களை சுதந்திரமாக நடமாட விட்டால், ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய சுற்றுலா இடங்களில், தங்குவதற்கு அறைகள் கூட கிடைக்காது.எனவே, நம்பிக்கை தான் வாழ்க்கை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா பற்றிய அச்சமும், ஆபத்தும் விலக விலக, சுற்றுலா முன்பை விட வேகமாக உச்சம் பெறும். கொரோனா கற்றுத் தந்த பாடங்களில் ஒன்று, இருக்கும் பணம், சொத்துகளை வைத்து உறவுகளோடும், நட்புகளோடும் சுற்றுலா சென்று சுகம் காண வேண்டும் என்ற நினைப்பை மேலோங்கச் செய்திருக்கிறது.
மக்கள் வீறு கொண்டு பரவசத்துடன் சுற்றுலா செல்வர். ஓட்டல்கள் நிரம்பி வழியும். வேலை போச்சே என்ற வேதனையில், சுற்றுலாத் துறையில் இருப்பவர்கள், கூடுதல் வேலை செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுவர்.வேலை வாய்ப்புகளும், சுற்றுலா வருமானமும் பல்கிப் பெருகும். இதற்காக, தமிழக அரசும், சுற்றுலாத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.தமிழகத்தின் ஒவ்வொரு அங்குல நிலமும் சுற்றுலாத் தலமே. ஆசியாவிலேயே, தமிழகம், சுற்றுலாத் துறையில் முதலிடம் வகிக்கும் நாள், வெகு துாரத்தில் இல்லை. கொரோனாவால், சுற்றுலா எனும் புலி பதுங்கி இருக்கிறது; புலி பதுங்குவது, பாயத் தான் என்பதை அனைவரும் அறிவோம். -'கலைமாமணி' வீ.கே.டி.பாலன்தலைவர், தமிழ்நாடு சுற்றுலா பயண மற்றும் விருந்தோம்பல் சங்கம்.மொபைல் எண் 98410 78674இ - மெயில் balan@maduratravel.com.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
24-ஜூன்-202014:05:10 IST Report Abuse
J.Isaac எலி ஆகிவிட போகுது.
Rate this:
Cancel
24-ஜூன்-202013:33:55 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் நம்பிக்கை வாழ்த்துக்கள் ஆனால் என் நண்பர் THIRUMANA MANDABAM வைத்துள்ளார் அவர் சொன்னதை கேட்கும்போதே பகீர் என்றது திருமணம் சிம்பிள், அதனால் COOK 40 பேர் இருந்த இடத்தில 4 பேர், பண்டல் வேலை காலி, போட்டோக்ராபர், டெகரேஷன் இப்படி CHAIN LINK போல மொத்த தொழில் காலி இதை வைத்து TRANSPORT பத்திரக்கடை, PROVISON STORE இப்படி நினைக்கவே பயம் நீங்கள் நம்பிக்கை உண்மையில் இப்போது எங்கள் வங்கியில் உள்ள சேமிப்பு குறைந்து கொண்டு தான் இருக்கிறது அது என்று கூடி அப்புறம் TOUR எங்களை பொறுத்தவரை கஷ்டம் தான்
Rate this:
Cancel
24-ஜூன்-202011:53:48 IST Report Abuse
ஆப்பு சுற்றுலாவுக்கு செவழிக்க ஆளுக்கு 10000 ரூவா வங்கிக்கணக்கில் போடணும். மத்திய, மாநில அரசுகள் செய்வீர்களா... செய்வீர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X