அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இரண்டு எரிவாயு மின் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சென்னை; ''சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இரண்டு எரிவாயு மின் திட்டத்தை நிறுவ, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், நாமக்கலில், 25 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, 'பயோ காஸ்' உற்பத்தி பணிகளுக்கான இயந்திரத்தை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.

அத்துடன், நாமக்கல், சேலம், புதுச்சத்திரம், ராசிபுரம் ஆகிய இடங்களில், 'கம்ப்ரஸ்டு பயோ காஸ்' எனப்படும், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு, சில்லரை விற்பனை நிலையங்களையும் துவக்கி வைத்தார்.அப்போது, அவர் பேசியதாவது:இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஜெர்மனி நாட்டின், ஆயில் டாக்கிங் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக, ஐ.ஓ.டி., உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேவைகள் நிறுவனம், நாமக்கலில், 34 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம், 2.4 மெகா வாட் திறன் உடைய, பயோ காஸ் உற்பத்தி செய்கிறது. இதிலிருந்து, கம்ப்ரஸ்டு பயோ காஸ் தயாரிக்க, 25 கோடி ரூபாயில், புதிய தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.இத்தொழிற்சாலையில், தினமும், 15 டன் கம்ப்ரஸ்டு பயோ காஸ், 20 டன் உயிரி உரங்கள் தயாரிக்கப்படும்.

தமிழகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில், முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், மொத்த புதுப்பிக்கத் தக்க எரிசக்தி நிறுவு திறன், 15 ஆயிரத்து, 876 மெகா வாட்.இதில், நீர்மின் நிலைய நிறுவு திறன், 2,322 மெகாவாட், காற்றாலை மின் நிறுவு திறன், 8,523 மெகாவாட், சூரியசக்தி நிறுவு திறன், 4,054 மெகா வாட், தாவரக்கழிவு மின் நிறுவு திறன், 266 மெகா வாட், இணை மின் உற்பத்தி நிறுவு திறன், 711 மெகா வாட். சென்னையில், அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இரண்டு எரிவாயு மின் திட்டத்தை, சென்னையை சுற்றியுள்ள பகுதியில் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X