பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு 64 ஆயிரமானது மதுரையில், 1,000த்தை நெருங்குது!

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சென்னை; தமிழகத்தில் கொரோனா தொற்றால், 64 ஆயிரத்து, 603 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 35 ஆயிரத்து, 339 பேர் குணமடைந்த நிலையில், 833 பேர் இறந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பாதிப்பு, 1,000த்தை நெருங்குகிறது.இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், கொரோனா பரிசோதனைக்காக, 87 ஆய்வகங்கள் உள்ளன. அதில், நேற்று, 25 ஆயிரத்து, 148 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 2,516 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 38 பேர். சென்னையில், 1,380 பேர்; செங்கல்பட்டில், 146 பேர்; மதுரையில், 137 பேர்; திருவள்ளூரில், 156 பேர்; திருவண்ணாமலையில், 110 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.அரியலுார், திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், பரவலாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, 9.44 லட்சம் பேருக்கு நடத்திய பரிசோதனையில், 64 ஆயிரத்து, 603 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில், 44 ஆயிரத்து, 30 பேர்; செங்கல்பட்டில், 4,030 பேர்; காஞ்சிபுரத்தில், 1,286 பேர்; திருவள்ளூரில், 2,826 பேர்; திருவண்ணாமலையில், 1,313 பேர், மதுரையில், 988 பேர், கடலுாரில், 850 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 39 பேர் இறப்புநேற்று, 1,227 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மொத்தம், 35 ஆயிரத்து, 339 பேர் குணமடைந்துள்ளனர். சில தினங்களில் உயிரிழந்தவர்களில், 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, கொரோனா பாதிப்பால், 833 பேர் இறந்துள்ளனர். சென்னையில், 645 பேர்; செங்கல்பட்டில், 57 பேர்; திருவள்ளூரில், 44 பேர்; காஞ்சிபுரத்தில், 14 பேர்; விழுப்புரத்தில், 12 பேர் இறந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில், 10க்கும் குறைவான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X