பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் கொடுங்க; பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

தேனி; கொரோனாவால் நிதி நெருக்கடியால் சம்பளம் இன்றி தவிக்கும் பணியாளர்கள் நலன்கருதி கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.10 லட்சம் கடன் வழங்க வேண்டும் என மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க ('டாக்பியா') பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன், வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:மாநிலத்தில் 4,500 தொடக்க கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கொரோனாவால் சங்கம் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கிய கடன்களுக்கு 2020 ஆகஸ்ட் வரை தவணை நீடித்துள்ளதால் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.ஏப்., முதல் ஜூன் வரை பொது வினியோக திட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்குவதால் சங்கங்கள் வரவு, செலவு இன்றி உள்ளன.

பொது வினியோக திட்ட மானியமும் 2 ஆண்டுகளாக வழங்கவில்லை. பயிர் கடனுக்குரிய 7 சதவீத வட்டி மானியம் பல மாதங்களாக வழங்க வில்லை. காலிச்சாக்குகள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளன. லாபத்தில் இயங்கும் சில சங்கங்கள் மட்டும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குகின்றன. பெரும்பாலனவற்றில் சம்பளத்திற்கு வழியில்லை.பணியாளர் நலன்கருதி சங்கங்களுக்கு தலா ரூ.10 லட்சம் கடனை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் குறைந்த வட்டியில் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X