பொது செய்தி

தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் நாளை மத்திய துணைக்குழு ஆய்வு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

தேக்கடி; முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையிலான துணைக் கண்காணிப்புக்குழு நாளை (ஜூன் 25) ஆய்வு செய்கிறது.

இக்குழுவில் தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினு பேபி, உதவி பொறியாளர் பிரசீத் உள்ளனர்.ஜன. 22 ல் அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக(மொத்த உயரம் 152 அடி) இருந்தபோது அணையில் செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து இக்குழு ஆய்வு செய்தது.

தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் 5 மாதத்திற்குப்பின், நாளை இக்குழு பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதியை பார்வையிடுகிறது. மழையின் அளவு, அணைக்கு நீர் வரத்து மற்றும் தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு குறித்து ஆய்வு நடத்துகிறது. பின்னர் தேக்கடி ஆய்வாளர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் கொரோனா ஊரடங்கால் அணை பராமரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து தமிழக அதிகாரிகள் தெரிவிப்பர். நேற்று அணை நீர் மட்டம் 112.40 அடியாக இருந்தது. நீர்வரத்து, திறப்பு வினாடிக்கு தலா 125 கனஅடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X