சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.7.50 லட்சம் மதிப்பு மது பாட்டில்கள் திருட்டு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை; விராலிமலை அருகே, 'டாஸ்மாக்' கடையின் பூட்டை உடைத்து, 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை, விராலிமலை அருகே, புதுப்பட்டி கிராமத்தில், டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று காலை, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கடையின் மேற்பார்வையாளர், உள்ளே சென்று பார்த்த போது, 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடு போனது தெரிந்தது.கொரோனா தொற்று அதிகரிப்பால், விரைவில் தமிழகம் முழுதும் ஊரடங்கு அமலுக்கு வரும் என்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், பதுக்கி விற்பதற்காக, மது பாட்டில்கள் திருடப்பட்டதா என, விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X