வெளியூரில் இருந்து வந்தவர் வீடு சூறை; ஐந்து பேர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளியூரில் இருந்து வந்தவர் வீடு சூறை; ஐந்து பேர் கைது

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1)
Share

புதுக்கோட்டை; சென்னையில் இருந்து வந்ததாக கூறியதால் ஏற்பட்ட தகராறில், வீட்டைச் சேதப்படுத்திய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை, ஏம்பல் அருகே, தொன்னங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா, 37; பெங்களூரில் பணிபுரிந்து, சில நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு வந்தார்.அவர், சென்னையில் இருந்து வந்ததாக, இதே பகுதியைச் சேர்ந்த துரைமாணிக்கம், 40, வருவாய் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த கருப்பையா, நேற்று முன்தினம் இரவு, துரைமாணிக்கத்திடம் தகராறு செய்தார்.

சிறிது நேரத்தில், துரைமாணிக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்து, கருப்பையா வீட்டை அடித்து நொறுக்கினார். கருப்பையாவின் மனைவி புகாரின்படி, ஏம்பல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, துரைமாணிக்கம் உட்பட, ஐந்து பேரை கைது செய்தனர். மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X