சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்துக்காக தாய், சகோதரி கொலை

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

பெரம்பலுார்; சொத்துக்காக தாய், சகோதரியை கொலை செய்த பெண்ணையும், அவரது, 14 வயது மகனையும் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், அய்யலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி, 60. கணவரை இழந்த இவருக்கு, வள்ளி, 35, ராஜேஸ்வரி, 32, என்ற மகள்கள் உள்ளனர்.மகள்களின் கணவர்கள் வெளிநாட்டில் இருப்பதால், ராஜேஸ்வரி தாய் வீட்டிலும், வள்ளி, 14 வயது மகனுடன், வேறு வீட்டிலும் வசித்து வந்தனர்.

கடந்த, 19ம் தேதி ராணி, அவரது வீட்டில் மயங்கிய நிலையில், உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அருகில், ராஜேஸ்வரி இறந்து கிடந்தார். பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராணியும், சிறிது நேரத்தில் இறந்தார். குடும்ப தகராறில், தாய், மகள் தற்கொலை செய்து கொண்டதாக, முதலில் கூறப்பட்டது. மருவத்துார் போலீசாரின் தொடர் விசாரணையில், சொத்துகளை பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில், தாய், சகோதரியை, வள்ளியும் அவரது மகனும் சேர்ந்து விஷம் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிந்தது.நேற்று முன்தினம் இரவு, இருவரையும் கைது செய்த போலீசார், வள்ளியை பெரம்பலுார் கிளை சிறையிலும், சிறுவனை, திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.வாலிபர் கொலைபெரம்பலுார் மாவட்டம், திம்மூரைச் சேர்ந்த திவ்யா, 22, என்பவரை, அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார், 25, காதலித்தார்.பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த அவர்கள், அதே ஊரில் குடும்பம் நடத்தி வந்தனர்.நேற்று முன்தினம் இரவு, திவ்யாவின் அண்ணன் பாலகுமார், 24, செல்வகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் குத்த முயன்றார். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த எம். செல்வகுமார், 24, என்பவர் தடுக்க முயன்றார்.கத்தி குத்தில் காயமடைந்தவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். குன்னம் போலீசார், பாலகுமார், அவரது தந்தை, தாய் ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம் நாகை மாவட்டம், நாகூர் அடுத்த நரிமனத்தைச் சேர்ந்தவர் செந்தில், 42; மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். செந்தில், கிழக்கு கடற்கரை சாலையில், பஞ்சர் ஒட்டும் கடை வைத்துள்ளார். நேற்று காலை, செந்தில், இருசக்கர வாகனத்தில், கடைக்கு வந்தார். அப்போது, பூதங்குடி சாலையில் மறைந்து நின்ற ஐந்து பேர், அவரது வாகனத்தை மறித்து அரிவாள், கத்தி ஆகிய ஆயுதங்களால் சரமாரி வெட்டி தப்பியோடினர். இதில், செந்தில் இறந்தார்.முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என, நாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X