சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி மார்க்கெட்டில் தீ 81 கடைகள் எரிந்து நாசம்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
 ஊட்டி மார்க்கெட்டில் தீ 81 கடைகள் எரிந்து நாசம்

ஊட்டி; ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில், நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், 81 கடைகள் சாம்பலாயின. நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அங்கிருந்த ஒரு டீக்கடையில், மூன்று சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதனால், தீ பரவி, பல கடைகள் சாம்பலாகின.தீயணைப்பு துறையினர், விரைவாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை, 4:00 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, நகராட்சி கமிஷனர் சரஸ்வதி மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

தடய அறிவியல் துறை இணை இயக்குனர், ரமேஷ் கூறுகையில், ''மார்க்கெட்டில் உள்ள ஒரு டீக்கடையில் வைக்கப்பட்டிருந்த சானிடைசரில், தீப்பொறி விழுந்து, விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த, மூன்று சிலிண்டர்கள் வெடித்து சிதறி உள்ளன. அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன,'' என்றார்.நகராட்சி கமிஷனர் சரஸ்வதி கூறும்போது, ''இந்த விபத்தால், 81 கடைகள் எரிந்து சாம்பலாகி உள்ளன. முதற்கட்ட ஆய்வில், 2 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''தீ விபத்து, இரவில் நடந்ததால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். மர மில் நாசம்சேலம் மாவட்டம், தாரமங்கலம், பி.டி.ஓ., அலுவலகம் எதிரே, தனியார், 'டிம்பர்ஸ்' உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் அதிகாலை, 3:30 மணிக்கு, திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. நான்கரை மணி நேர போராட்டத்துக்குப் பின், காலை, 8:00 மணிக்கு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

தேக்கு, பர்மா தேக்கு, சால் உள்ளிட்ட பல்வேறு வகை மரக்கட்டைகள், ரீப்பர்கள் கருகின. மரம் அறுக்கும் கருவி ஆறு, அறுவை கூடம் முற்றிலும் சேதமானது. சேத மதிப்பு, 1 கோடி ரூபாய் இருக்கலாம் எனத் தெரிகிறது. மில் அருகிலுள்ள, 'டிரான்ஸ்பார்மரில்' ஏற்பட்ட மின் கசிவால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X