பொது செய்தி

தமிழ்நாடு

23 டன் தரமற்ற விதை விற்பனை தஞ்சை விவசாயிகள் அதிர்ச்சி

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
 23 டன் தரமற்ற விதை விற்பனை தஞ்சை விவசாயிகள் அதிர்ச்சி

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்ட தனியார் விதை விற்பனை நிலையங்களில், 23 டன் தரமற்ற விதைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், குறுவை சாகுபடி பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், தரமான விதைகள், உரிய விலையில், விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும், போதுமான விதைகள், இருப்பில் உள்ளதை கண்டறியவும், விதை சான்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.கோவை விதை ஆய்வு இணை இயக்குனர், மோகனசுந்தரம் தலைமையில், அதிகாரிகள் குழு, நேற்று முன்தினம் தஞ்சாவூர், அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டாரங்களில், நான்கு குழுக்களாக பிரிந்து, ஆய்வு மேற்கொண்டது.

அப்போது, 25 விதை மாதிரிகள் எடுத்து, தஞ்சை விதை பரிசோதனை நிலையத்தில், ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஆறு விதை விற்பனை நிலையங்களில், விற்பனையான, 8.26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 23.45 டன் விதைகள் தரமற்றவை என கண்டறிப்பட்டது.அந்த விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து, விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள், நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.இதையறிந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். 'டெல்டா முழுதும் விதைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X