சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது கொலை மிரட்டல் புகார்

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை; மதுரையில், பா.ஜ., இளைஞரணி மாநில செயலருக்கு, தி.மு.க., -- எம்.எல்.ஏ., செருப்பை காட்டி கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து, விசாரணை நடக்கிறது.

மதுரை, ஊமச்சிக்குளத்தைச் சேர்ந்தவர், சங்கரபாண்டி; பா.ஜ., இளைஞரணி மாநிலச் செயலர். இவர், மதுரை கிழக்கு தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி, ஊழல் செய்ததாக, சில பத்திரிகைகள், ஆன்லைனில் வெளியான செய்திகளை, 'பேஸ்புக், டுவிட்டரில்' பதிவேற்றம் செய்திருந்தார்.ஆத்திரமுற்ற மூர்த்தி, ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம், சங்கரபாண்டி வீட்டிற்கு சென்று, 'ஊழல் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா' எனக் கேட்டு, வாக்குவாதம் செய்தார்.

ஒரு கட்டத்தில், தன் செருப்பை கழற்றி சங்கரபாண்டி, அவரது மனைவியை அடிக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான, வீடியோ வெளியானது.ஊமச்சிக்குளம் போலீசில், சங்கரபாண்டி நேற்று புகார் செய்தார். மூர்த்தி தரப்பிலும், புகார் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பிலும், விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
24-ஜூன்-202016:36:44 IST Report Abuse
Baskar பி.ஜெ.பி யின் தலைவர் ஒருவர் அறிவாலயத்தை ஒரு கேஸ் கொடுத்து இருந்தார். அவர் ஏன் இந்த கேஸை விரைவு படுத்த கூடாது. கிணற்றில் போட்ட கல் மாதிரி கிடக்கிறது. அந்த பத்திரத்தை விரைவில் வெளியே எடுக்க அவர் அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது அவனுடைய தலைவனுக்கு தலைவலி தானாக வரும். எதாவது அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் தான் அவர்கள் அடங்குவார்கள். இல்லை என்றால் இது போன்ற செயல்கள் நடக்கதான் செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X