'டூ வீலர்'கள் நிறுத்துவதால் மாற்றுத்திறனாளிகள் அவதி

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
 'டூ வீலர்'கள் நிறுத்துவதால் மாற்றுத்திறனாளிகள் அவதி

திருப்பூர்:கலெக்டர் அலுவலக 'போர்டிகோ'வில், 'டூ வீலர்'களை நிறுத்துவதால், சாய்வு தளத்தில் செல்ல முடியாமல் மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர்.கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்புற 'போர்டிகோ'வில், கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் திட்ட இயக்குனர் வாகனங்கள் மட்டும் நிறுத்தப்படும். மற்ற அதிகாரிகள் வாகனங்கள், ஸ்டேண்டில் நிறுத்தப்படுகின்றன.அரசு ஊழியர்களின் 'டூ வீலர்'கள், பின்புற 'போர்டிகோ'வில் நிறுத்தப்படுகின்றனர். கடந்த சில வாரங்களாக, கலெக்டரை சந்திக்க வருவோர், முன்புற போர்டிகோவில், 'டூ வீலர்'களை நிறுத்தி வைக்கின்றனர்.அதிக 'டூ வீலர்'களை நிறுத்துவதால், சாய்வு தளம் இருந்தும், அதை பயன்படுத்த முடியாமல், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். மீண்டும். 'போர்டிகோ'வில், டூ வீலர் நிறுத்த, கலெக்டர் தடை விதிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X