பொது செய்தி

தமிழ்நாடு

பழைய பஸ் ஸ்டாண்ட் இட மாற்றம்: முடிவு எடுக்காமல் முடிந்த ஆய்வு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் ஆய்வை முடித்து கொண்டனர்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், திருப்பூர் - காமராஜ் ரோட்டில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகம் முற்றிலும் இடித்து அகற்றி விட்டு நவீன பஸ் ஸ்டாண்ட்டாக மாற்றப்படவுள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டை கோவில்வழியில் அமைக்கப்பட்ட, தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றி செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்படும் நிலையில், இடமாற்றம் செய்வது தாமதமாகி வருகிறது.பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதனால், போக்குவரத்து கழகத்தினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.அதில், மாநகராட்சி தரப்பில், கட்டட இடிபாடுகள் அகற்றும் பணி முழுமையாக முடிந்த பின், பகுதி பகுதியாக கட்டுமான பணி துவக்குவது குறித்தும், அதனிடையே ஒரு பகுதியில் பஸ்கள் வந்து திரும்பும் வகையில் ஏற்பாடு செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.ஆனால், எந்த முடிவும் எடுக்காமல், அதிகாரிகள் தங்கள் ஆய்வை முடித்து கொண்டு கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X