பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் கட்டாயம்: அணியாவிட்டால் அபராதம்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
 முக கவசம் கட்டாயம்: அணியாவிட்டால் அபராதம்

திருப்பூர்:திருப்பூர் மாநகர் மற்றும் புற நகர் மாவட்ட பகுதிகளில், முக கவசம் அணியாமல் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அவ்வகையில், முககசவம் இன்றி வெளியே சுற்றுவோர் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சுகாதாரப் பிரிவினர் இது குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். நான்காம் மண்டல பகுதியில் நேற்று சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், சின்னதுரை கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகனங்களில் பயணிப்போர் மற்றும் நடந்து சென்ற, முக கவசம் அணியாத நபர்களிடம், 100 ரூபாய் அபராதம் விதித்து, ரசீது வழங்கப்பட்டது.மாநகராட்சி பகுதியில் நான்கு மண்டலங்களிலும் சுகாதார பிரிவினர் நேற்று நகரின் பல பகுதிகளில் இது போல் அபராதம் விதிக்கும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X