கொரோனா எச்சரிக்கை: வாகனம் மூலம் பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா எச்சரிக்கை: வாகனம் மூலம் பிரசாரம்

Added : ஜூன் 23, 2020
Share
 கொரோனா எச்சரிக்கை: வாகனம் மூலம் பிரசாரம்

திருப்பூர்:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வாகன பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.கொரோனா பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையிலும், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மாநகர் நல அலுவலர் பூபதி தலைமையில் நடந்த கூட்டத்தில், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.இதனால், மண்டல வாரியாக சுகாதார பிரிவினர் நேற்று வாகனம் மூலம் பகுதிவாரியாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X