பொது செய்தி

தமிழ்நாடு

மாலத்தீவில் இருந்து கப்பலில் 198 பேர் துாத்துக்குடி வருகை

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
 மாலத்தீவில் இருந்து கப்பலில் 198 பேர் துாத்துக்குடி வருகை

துாத்துக்குடி; மாலத்தீவில் இருந்து, கப்பலில், 198 பேர் நேற்று துாத்துக்குடி வந்தனர்.கொரோனா பரவலால், வெளிநாடுகளில் தவிப்பவர்களை, 'சமுத்திர சேது' திட்டத்தின் கீழ், கடற்படை கப்பல்களை அனுப்பி, மத்திய அரசு மீட்டு வருகிறது.

ஏற்கனவே, ஐ.என்.எஸ்., கப்பல் மூலம், இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து, இரண்டு முறை பயணியர் அழைத்து வரப்பட்டுஉள்ளனர்.மாலத்தீவில் தவித்த தமிழகத்தை சேர்ந்த, 195 பேர், புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று பேர் என, 198 இந்தியர்களுடன், ஐ.என்.எஸ்., ஐராவத் கடற்படை கப்பல், நேற்று துாத்துக்குடி துறைமுகம் வந்தது.கொரோனா சோதனை, குடியுரிமை சோதனைக்கு பின், அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வரும், 28ம் தேதி, ஈரான் நாட்டில் இருந்து, 700 பேர் மீட்கப்பட்டு துாத்துக்குடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X