முக கவசம் அணியாத கட்டட தொழிலாளர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியாத கட்டட தொழிலாளர்கள்

Added : ஜூன் 23, 2020
Share
 முக கவசம் அணியாத  கட்டட தொழிலாளர்கள்

அவிநாசி:குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில், தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல், தொழிலாளர்கள் பணிபுரிவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சூளை பகுதியில் நடக்கும், குடிசை மாற்று வாரிய கட்டட பணிகளில், தொழிலாளர்கள் முக கவசம், சமூக இடைவெறியின்றி பணியாற்றுகின்றனர்.பல இடங்களிலும், வட மாநில தொழிலாளர்கள் முக கவசம் கூட அணிவது இல்லை. திறந்தவெளியில் குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சுகாதாரம் காப்பதில் அவர்கள் மெத்தனம் காண்பிப்பதால், தொற்று பரவும் வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X