'செக்போஸ்ட்' பணியில் வி.ஏ.ஓ., மன உளைச்சலுக்கு ஆளாவதாக புகார்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:பாதுகாப்பு வசதியின்றி, 'செக்போஸ்ட்' பணியுடன், வழக்கமான கிராம நிர்வாக பணியையும் கவனிப்பதால், வி.ஏ.ஓ.,கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், வாகன போக்குவரத்துக்கு, 'இ-பாஸ்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது, மண்டலங்களுக்கு இடையே, 'இ-பாஸ்' கட்டாயம். மாவட்ட எல்லைகளில், 'செக் போஸ்ட்' அமைத்து, போலீஸ், சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து, கண்காணித்து வருகின்றனர்.மூன்று 'ஷிப்ட்' அடிப்படையில், 24 மணி நேரமும் மாவட்ட எல்லைகளில், 'செக் போஸ்ட்' இயங்குகின்றன. வருவாய்த்துறை சார்பில், வி.ஏ.ஓ.,கள் இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.வாரத்தில், இரு நாட்கள் 'செக் போஸ்ட்' பணியும், பிற நாட்களில் வழக்கமான பணிகளையும் கவனிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.வி.ஏ.ஓ.,கள் கூறுகையில், 'செக் போஸ்ட்' பணி முடிந்து, வழக்கமான பணிகளையும் கவனிக்கிறோம். 'சானிடைசர்' முக கவசம் கூட வழங்குவதில்லை. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், உடனே வி.ஏ.ஓ.,கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். வழக்கமான பணிகளை, சுழற்சி முறையில் மாற்ற வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X