சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமராவதிபுதுாரில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சிவகங்கை:மாவட்டத்தில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் இருந்து வருவோர் மூலம் மேலும் தொற்று அதிகரிப்பால், அமராவதிபுதுாரில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு நேற்று முதல் செயல்பட துவங்கியது.

சென்னையில் இருந்து வருவோர் மூலம் சிவகங்கையில் தொற்று அதிகரிக்கிறது. விமானம், ரயில், சொந்த வாகனங்களில் வந்த 10 ஆயிரத்து 400 பேரின் ரத்தம், சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர்.அதில், நேற்று காலை வரை 229 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில் படிப்படியாக குணமடைந்து வருகின்றனர்.

சிவகங்கையில் கூடுதல்படுக்கை வசதிகளுடன்கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இருப்பினும் திருப்புத்துார், காரைக்குடி, தேவகோட்டை பகுதியினருக்கு தொற்று அதிகரிக்கின்றன.தொற்றுடன் வருவோரின் வசதிக்காக காரைக்குடி, அமராவதிபுதுார் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டை கலெக்டர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார்.

தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்புத்துார், சிங்கம்புணரி, காரைக்குடியில் இருந்து தொற்றுடன் வருவோருக்கு அமராவதிபுதுாரில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X