அரிய வகை மரக்கன்று; 6வது திட்டத்தில் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரிய வகை மரக்கன்று; 6வது திட்டத்தில் முடிவு

Added : ஜூன் 23, 2020
Share

திருப்பூர்:மஞ்சள் கொன்றை, மந்தாரை, பாலுார் பலா, செம்மரம் என, மங்களகரமான மரங்களுடன், 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டம் துவங்கியுள்ளது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், எட்டு லட்சம் மரக்கன்றுகளை நட்டு, சாதனை இலக்கை எட்டிப்பிடித்தது. ஆறாவது திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகளுடன், துவங்கியுள்ளது.காங்கயம், வயக்காட்டுப்புதுாரில், ஸ்டார் பொன்னுசாமி என்பவரின் தோட்டத்தில், 6வது திட்டம் துவங்கப்பட்டது. அவரின் குடும்பத்தினர் பங்கேற்று மரக்கன்று நட்டனர். அதில், நீர்மருது, புங்கன், துாங்குவாகை, பீயன், மஞ்சள் கொன்றை, நெல்லி, செம்மரம், மந்தாரை, மஞ்சள் கொன்றை, மகிழம், சந்தனம், நாட்டுவாகை, மூங்கில், குமிழ், சிசு, சரக்கொன்றை மரங்கள் என, 300 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.திட்டக்குழுவினர் கூறியதாவது:திட்டத்தில் இதுவரை இல்லாத வகையில், செம்மரம், நாட்டு அத்தி, பாலுார்பலா உள்ளிட்ட அரியவகை மரங்களும் நடப்பட்டன. இவ்வகை நீண்ட காலம் வளர்ந்து, பலன்தர கூடியவை. பறவைகளுக்கு மிகுந்த உறுதுணையாக இவை விளங்கும். மரம் நட விரும்புவோர், 90470 86666 என்ற எண்களிலும், பசுமை பயணத்தில் கரம்கோர்க்க விரும்பும் பொதுநல அமைப்பினர், 98435 55800 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X