பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்: ராமநாதபுரம்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

வியாபாரிகளுக்கு அபராதம்

கமுதி: ஊரடங்கால் 4 மாதமாக கமுதியில் வாரச்சந்தை மட்டுமின்றி உழவர் சந்தையும் மூடப்பட்டுள்ளது. கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டோரத்தை ஆக்கிரமித்து, வியாபாரிகள் சிலர் தற்காலிக கடைகளை அமைத்துள்ளனர். முகக்கவசம், கையுறைகளின்றி விற்பனையில் ஈடுபட்டதால், நேற்று 40 வியாபாரிகளுக்கு தலா நுாறு ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

உர நிர்வாக பயிற்சி

ராமநாதபுரம்: இரட்டையூரணியில் தென்னைக்கு உர நிர்வாகம் செய்வது குறித்து விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி,செயல் விளக்கம் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் சேக் அப்துல்லா தலைமை வகித்தார். உதவி இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். தென்னை நுண்ணுாட்ட கலவை(கிலோ ரூ.82) உச்சிப்புளி வோண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது. உரத்தை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும், என உதவி இயக்குனர் கூறினார்.

விழிப்புணர்வு முகாம்

திருப்புல்லாணி: பிரதமரின் நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம் திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள 25 வருவாய் கிராமங்களிலும் வேளாண்மைத்துறை மூலம் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் சேர தகுதி பண்ணைக்குட்டை, கிணறு, ஆழ்துளைகிணறு உள்ள அனைத்து விவசாயிகள்.பயனாளிபெயரில் நேரடி பட்டா. கூட்டுப்பட்டாவாக இருந்தால் வாரிசு சான்றிதழ்படி மானியம்.மானியம் பெற ஓராண்டுக்குள் தாலுகா அலுவலகத்தில் இருந்து சிறு, குறு விவசாயி சான்றிதழ் அளிக்க வேண்டும்.விவரங்களுக்கு விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

கலெக்டரிடம் புகார்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் நவாஸ்கனி எம்.பி., ஆகியோர் நேற்று கலெக்டர் வீரராகவ ராவிடம் புகார் மனு அளித்தனர். அதில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கொரோனா வார்டில் அடிப்படை வசதி இல்லை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

\ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: சி.ஐ.டி.யூ., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்தும், டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ள அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும்ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆட்டோ சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சிவாஜி தலைமை வகித்தார்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள போகலூர் ஊராட்சியில் 14வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது. போகலூர் ஊராட்சி தலைவர் கலையரசி தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் முருகேசன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பூமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பழனி வரவேற்றார். இங்கு ஒரு குடம் தண்ணீர் ரூ. 5க்கு வழங்கப்படவுள்ளது.----

சலுான்கள் பகல் 2 மணிக்கு மூட முடிவு

ராமநாதபுரம்: தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் மாவட்ட செயலாளர் ஜி.செந்தில்குமார் கூறியதாவது:மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வர்த்தக நிறுவனங்களை பகல் 3:00 மணிக்கு மேல் மூட வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் சுய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள முடி திருத்தும் கடைகள் அனைத்தும் ஜூன் 30 வரை பகல் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X