பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளருக்கு ஹோமியோபதி மாத்திரை: வைரஸ் ஒழிப்பில் சேவாபாரதி முனைப்பு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மூலம், தொழிலாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஹோமியோபதி மாத்திரை வழங்க திட்டமிட்டுள்ளது சேவாபாரதி.திருப்பூர் மாவட்ட சேவாபாரதி, ஊரடங்கு நேரத்தில், சுகாதாரம், துப்புரவு பணியாளர் தினம் ஐந்தாயிரம் பேருக்கு உணவு வழங்கல், பால் வினியோகம், ஏழைகளுக்கு இலவச பால், ஆம்புலன்ஸ் சேவை, வீடு தேடி மளிகை, மருந்து டெலிவரி என, ஏராளமான சேவைகளை மேற்கொண்டது.
ஊரடங்கு தளர்வால், திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயக்கத்தை துவக்கியுள்ளன. வெளிநாடுகளிலிருந்து, ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலன் கருதி, சேவாபாரதி, புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.சேவாபாரதி மாவட்ட தலைவர் விஜயகுமார் கூறியதாவது:ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, அந்தந்த நிறுவனங்கள் மூலம், ஹோமியோபதி மாத்திரை வழங்கப்பட உள்ளது.
இதற்காக தனியார் நிறுவனத்திடமிருந்து, 2 லட்சம் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்க, எட்டு லட்சம் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.தொழிலாளருக்கு நேரடியாக அல்லாமல், நிறுவனங்கள் மூலம், மாத்திரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள நிறுவனங்கள், 98942 11005 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிறுவனங்களில் தேவையை பொருத்து, கொள்முதல் செய்து, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X