டில்லி கலவர வழக்கு சபூரா சர்காருக்கு ஜாமின் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லி கலவர வழக்கு சபூரா சர்காருக்கு ஜாமின்

Added : ஜூன் 23, 2020
Share

புதுடில்லி; டில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட, மாணவி சபூரா சர்காருக்கு, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று, ஜாமின் வழங்கியது.மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லியில் தொடர் போராட்டங்கள் நடந்தன.

கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டஇந்தப் பேராட்டத்தில், கலவரம் வெடித்தது. இதில், 53 பேர் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக, டில்லி, ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவி, சபூரா சர்கார் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, ஜாமின் மறுக்கப்பட்டது.இந்நிலையில், ஜாமின் கோரி, சபூரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அவருக்கு ஜாமின் வழங்க, டில்லி போலீசார், மனித நேய அடிப்படையில், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் ஜாமின் அளித்தது. 'அரசின் அனுமதியின்றி, டில்லியை விட்டு வெளியேறக் கூடாது. விசாரணை அதிகாரியுடன், மொபைல் போனில் தொடர்பில் இருக்க வேண்டும்' என, சபூராவுக்கு, உயர் நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X