ரூ.3 லட்சம் கோடி நிலுவை; எம்.எஸ்.எம்.இ.,கள் திணறல்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:வங்கிக்கடனுதவி கிடைக்கின்றபோதிலும், நிலுவைத்தொகை மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர வேண்டியிருப்பதால், நாடு முழுதும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைத் திறம்பட நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது.ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, நாடு முழுதும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) ஓரளவு இயங்கி வருகின்றன. நடைமுறை மூலதனம், தொழிலாளர் பற்றாக்குறை, ஆர்டர் கிடைக்காமை போன்றவற்றால், இவை முழுவீச்சில் இயங்குவதில் சிக்கல் நிலவுகிறது.தொழில் நிறுவனத்தினர் சிலர் கூறியதாவது:சமீபத்தில் நடந்த ஆய்வில், நிலுவைத்தொகை கிடைக்கப்பெறாமை, குறிப்பாக, பெருநிறுவனங்களிடம் இருந்து உரிய தொகை வராமல் இருப்பதுதான், எம்.எஸ்.எம்.இ.,க்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாததற்கு முக்கிய காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.கோவை, திருப்பூர் பகுதியில் உள்ள ஜவுளி, பின்னலாடை, விசைத்தறி, வார்ப்படம், வெட்கிரைண்டர், பம்ப்செட் மோட்டார் உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனங்களில், பெரும்பாலானவை, எம்.எஸ்.எம்.இ., வரம்புக்குள் வருபவை.வங்கிகள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறபோதும், இத்தொகையை காட்டிலும் அதிகமாக, நிலுவைத்தொகைகள் கிடைக்க பெறாமல் உள்ளன.குறிப்பாக, 30 முதல் 45 நாட்களுக்குள் நிலுவைத்தொகைகளைப் பெருநிறுவனங்கள் வழங்குவது வழக்கம். கொரோனா பரவலால், வர்த்தகம் முடங்கியதால், நிலுவை தொகை வழங்காமல், பெருநிறுவனங்கள் பலவும் தட்டிக்கழிக்கின்றன.திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி தொழிற்கூடங்கள், வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து, கோடிக்கணக்கில், நிலுவைத்தொகை கிடைக்காமல் தடுமாறுகின்றன. கொரோனா பரவல் நீடித்தால், நிலுவைத்தொகை கிடைப்பது தாமதமாகும் அல்லது நிலுவையில் ஒரு பங்குத்தொகை மட்டுமே கிடைக்கும். நிலுவை தொகைகள் கிடைக்கப்பெறாமல், பல எம்.எஸ்.எம்.இ.,க்கள், மூழ்கும் நிலையில் உள்ளன.வங்கிக்கடனுதவி பேருதவி என்றபோதிலும், நிலுவை தொகையும் கிடைத்தால் மட்டுமே, எம்.எஸ்.எம்.இ.,க்கள் திறம்பட நடத்த முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X