பொது செய்தி

இந்தியா

துாதரக ஊழியர்களை குறைக்க உத்தரவு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

புதுடில்லி; இந்தியாவில் உள்ள துாதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை, ஒரு வாரத்துக்குள், 50 சதவீதமாக குறைக்கும்படி, பாகிஸ்தானுக்கு, நம் வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள், உளவு பார்ப்பது, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு என, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர்.அதையடுத்து, இந்தியாவில் உள்ள துாதரக ஊழியர்களின் எண்ணிக்கை, ஒரு வாரத்துக்குள், 50 சதவீதமாக குறைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் துாதரக பொறுப்பு அதிகாரியை அழைத்து இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும், 50 சதவீதம் குறைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X