சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகக்கவசமின்றி டூவீலரில் சென்றால்அலைபேசிக்கு வருது அபராத தகவல்: போக்குவரத்து போலீசாரின் அமைதியான அபராதம்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சிவகங்கை:மாவட்டத்தில் முக கவசமின்றி வாகனத்தில் செல்வோருக்கு, பின்னாலேயே அலைபேசிக்கு போலீசாரின் அபராத குறுஞ்செய்தி செல்வதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று 229யை தொட்டுவிட்டது. நாளுக்கு நாள் தொற்றுடன் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கு ஒரே தீர்வு மக்களே தாங்களே முன்வந்து ஊரடங்கை கடைபிடித்து தேவையின்றி வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். இது மட்டுமின்றி சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் எவ்வித ஊரடங்கு விதிமுறைகளையும் பின்பற்றாமல், தேவையின்றி வாகனங்களில் சுற்றுகின்றனர்.


அமைதியான அபராதம்

வாகன எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், முகக்கவசம்,ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன பதிவு எண்ணை ஊர்க்காவல் படையினர் குறிக்கின்றனர். தினமும் 100க்கும் மேற்பட்ட வாகன எண்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

வாகன உரிமையாளரின் அலைபேசிக்கு ரூ.200 அபராதம் விதித்து குறுஞ்செய்தி செல்லும் போது தான் அதிர்ச்சி அடைகின்றனர். நாள் ஒன்றுக்கு மாவட்ட அளவில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, விதிகளை மீறி டூவீலரில் 3 பேர் செல்வது போன்ற காரணங்களுக்காக ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X