தமிழ்நாடு

நிறுவனங்கள் ஆட்களை தேடி! திருப்பூரில் ஆடை உற்பத்தி மெல்ல சூடு பிடிப்பு

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
நிறுவனங்கள் ஆட்களை தேடி! திருப்பூரில் ஆடை உற்பத்தி மெல்ல சூடு பிடிப்பு

திருப்பூர்:திருப்பூரில் ஆடை உற்பத்தி மெல்ல சூடு பிடித்து வருவதால், தொழிலாளர்களை, நிறுவனங்கள் தேடி வருகின்றனர்.திருப்பூரில், உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள்; நிட்டிங், டையிங், பிரின்டிங் என பல்வேறுவகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன.இந்நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் எட்டு லட்சம் பேர் பணிபுரிந்தனர்.
கொரோனா ஊரடங்கால், தமிழக தொழிலாளர் பலர், சொந்த ஊர் சென்றுவிட்டனர். ஊரடங்கு காலம்வரை திருப்பூரில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள், தளர்வுக்குப்பின், போராடி, சொந்த ஊர் சென்றுள்ளனர்.ஏற்கனவே பாதியில் கைவிட்ட ஆடைகளை தயாரிப்பது; முக கவசம், முழு கவச ஆடை தயாரிப்பில், பின்னலாடை நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து, சேம்பிள் ஆடை தயாரிப்புக்கான வாய்ப்புக்களும் வரத்துவங்கிஉள்ளன.
இந்நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை, பெரும்பாலான நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, டெய்லர்கள் தேவை அதிகரித்துள்ளது.தமிழக தொழிலாளர் ஏராளமானோர் சொந்த ஊர் செல்லாமல், திருப்பூரிலேயே, குடும்பத்துடன் வசித்துவருகின்றனர்.இவர்களை பணி அமர்த்தும் வகையில், பின்னலாடை நிறுவனங்கள், தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு உட்பட நகரின் பிரதான பகுதிகளில், மரங்கள், மின் கம்பங்களில், விளம்பர பலகைகளை தொங்கவிட்டு வருகின்றன.முன்னர், வடமாநில தொழிலாளரை எதிர்பார்த்து, இந்தியில் விளம்பர பலகை வைப்பர். தற்போது, ஓவர்லாக், பிளாட்லாக், சிங்கர் டெய்லர் தேவை என, தமிழிலேயே அதிகளவு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆடை உற்பத்தி துறையினர் கூறியதாவது:சொந்த ஊர் சென்றுள்ள தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூர் திரும்ப ஒரு மாதத்துக்கு மேலாகிவிடும். வெளிநாடுகளிலிருந்து, ஆயத்த ஆடை, முக கவசம் தயாரிப்புக்கான ஆர்டர்கள் வர துவங்கியுள்ளன. இவற்றை குறித்த காலத்துக்குள் தயாரித்து அனுப்புவது அவசியம்.தொழிலாளர் பற்றாக்குறையால், உற்பத்தி பாதிக்கப்படுகிறது. உள்ளூரில் வசிக்கும் தொழிலாளரை கொண்டு, பற்றாக்குறையை பூர்த்தி செய்து, உற்பத்தியை வேகப்படுத்தும் முயற்சியில், ஒவ்வொரு நிறுவனமும் ஈடுபட்டுள்ளன. இதற்காக, நகரில் முக்கியமான பகுதிகளில், கைகளால் எழுதி அல்லது பேனர் வைக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X