பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய விருதுக்கு விருப்பமா? விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 'டென்சிங் நார்கே' தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி அறிக்கை:ஒவ்வொரு ஆண்டும் நாட்டுக்கு பெருமை தேடித்தரும் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளருக்கு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 'டென்சிங் நார்கே' தேசிய சாகச விருது விண்ணப்பம் மற்றும் விபரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் உள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும், 27 மாலை, 5:00 மணிக்குள் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் உள்ள, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 0421 2244899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X