பொது செய்தி

தமிழ்நாடு

'எனக்கு செக் பவர் வேண்டாங்க...' ஊராட்சி துணை தலைவர் 'டிராமா'

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி தலைவராக இருப்பவர் சாந்தாமணி. இவரின் கணவர் வேலுசாமி, துணை தலைவராக உள்ளார். சிவகாமி, பத்மாவதி, காசிராஜன், கவிதா, அய்யாசாமி என, ஐந்து உறுப்பினர்கள், ஊராட்சியில் ஊழல் நடப்பதாக, கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.'மனைவி தலைவராகவும், கணவர் துணை தலைவராகவும் இருப்பதால், வார்டு உறுப்பினர்களை மதிப்பதில்லை. சுய லாபத்திற்காக சிலருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இப்படி ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. வரவு செலவு விவரங்களை ஆய்வு செய்து, இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என மனுவில், குறிப்பிட்டிருந்தனர்.இது விசாரணை நடத்த கலெக்டர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டதால், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சூழலில், ஊராட்சி துணை தலைவர் வேலுசாமி, தனக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால், 'செக்'கில் கையெழுத்திடும் அதிகாரம் வேண்டாம், ஊராட்சி செயலாளரிடம் கடிதம் கொடுத்தார்.இது குறித்து, நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தில், துணை தலைவரின் கடிதம் ஏற்று கொள்ளப்பட்டது. அவருக்கு பதில், 8வது வார்டு உறுப்பினர் அய்யாசாமிக்கு, கையெழுத்திடும் அதிகாரம் வழங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X