பொது செய்தி

தமிழ்நாடு

3ல் ஆர்ப்பாட்டம் நடத்த தொழிற்சங்கம் அறிவிப்பு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:தொழிலாளர் சட்டம் முறையாக பின்பற்ற வேண்டும் என்பது உட்பட கோரிக்கையை முன் னிறுத்தி, வரும், 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நடந்தது. சேகர், ஜெகநாதன் (ஏ.ஐ.டி.யு.சி.,), உண்ணி கிருஷ்ணன், ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.,), சிதம்பரசாமி, ரங்கசாமி (எல்.பி.எப்.,), சிவசாமி, பெருமாள் (ஐ.என்.டி.யு.சி.,), முத்துசாமி, குணசீலன்(எச்.எம்.எஸ்.,) பாண்டியராஜ், சம்பத்(எம்.எல்.எப்.,) பங்கேற்றனர்.தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதனடிப்படையில், திருப்பூரில் வரும் 3ம் தேதி, சமூக இடைவெளி பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடத்துவது.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் தலா, 7,500 ரூபாய் என்ற அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். இயல்பு நிலை திரும்பும் வரை தொழிலாளருக்கு, உணவு பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பது உட்பட, 13 அம்ச கோரிக்கை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது, என தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X