பொது செய்தி

தமிழ்நாடு

'தனிமை' நபர்கள் வெளியே சுற்றினால் போன் பண்ணுங்க!

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கோவை:தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பவர்கள் பற்றி, புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு எண்களை அறிமுகம் செய்துள்ளது.கோவை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்படும் நபர்கள் எவ்வித காரணங்களுக்காவும் வெளியில் வரக்கூடாது என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு வெளியே வருபவர்கள் மீது குற்றவியல் வழக்கு, பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து எந்த முன்னறிவிப்பும், அனுமதியும் இல்லாமல் வருவோர் குறித்து, அருகில் வசிப்பவர்கள் தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வந்து, தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களின் விபரம் அறிந்தால், 0422 2301114, 0422 1077, 94999 33870 ஆகிய எண்களில் புகார் அளிக்க, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X