தமிழ்நாடு

'கொரோனா' விதிமீறல் தடுக்க பறக்கும் படை! நேற்று முதல் களமிறங்கியது

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
'கொரோனா' விதிமீறல் தடுக்க பறக்கும் படை! நேற்று முதல் களமிறங்கியது

கோவை:சமூக இடைவெளி பின்பற்றாதது, முக கவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்க, கோவை மாநகராட்சி பகுதியில், மண்டலத்துக்கு, 4 வீதம், 20 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.கோவைக்கு வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து, தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள், நோய் பாதிப்பு இல்லாவிட்டாலும், 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென, சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.இருப்பினும், பலர் வெளியே உலா வருகின்றனர்.
இது போன்றவர்களை கண்டறிய, துாய்மை பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று, கணக்கெடுத்து வருகின்றனர். ஸ்டிக்கரில் குறிப்பிட்டுள்ள நபர்கள், வீட்டில் இல்லாவிட்டால், வழக்கு பதியப்படுகிறது.பொது இடங்கள், வர்த்தக நிறுவனங்களில், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருப்பது, முக கவசம் அணியாமல் செல்வது போன்றவற்றை கண்காணித்து, அபராதம் விதிக்க, மண்டலத்துக்கு, 4 வீதம், 20 பறக்கும் படைகளை, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் நியமித்துள்ளார்.
கிழக்கு மண்டலம் - உதவி கமிஷனர் (வருவாய்) அண்ணாதுரை, மேற்கு - நிர்வாக பொறியாளர் சரவணக்குமார், வடக்கு - நிர்வாக பொறியாளர் பார்வதி, தெற்கு - நிர்வாக பொறியாளர் ஞானவேல், மத்திய மண்டலம் - நிர்வாக பொறியாளர் சசிப்பிரியா ஆகியோர், பறக்கும் படைக்கு தலைமை ஏற்கின்றனர்.
ஒவ்வொரு குழுவுக்கும் உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள் தலைமை வகிக்கின்றனர். குழுவில் உதவி/ இளம் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.ஒவ்வொரு குழுவுக்கும் தலா, 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பணியை உடனடியாக துவக்க, ஒவ்வொருவருக்கும் நேற்று உத்தரவு நகல் வழங்கப்பட்டது. வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-202006:30:41 IST Report Abuse
Mani . V ஆபீஸர்ஸ் இது டாஸ்மாக்குக்கு பொருந்துமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X