பொது செய்தி

தமிழ்நாடு

என் பெயர் ஜாய்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 என் பெயர் ஜாய்

கோவை:கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு சென்றால், வித்தியாசமான வரவேற்பு கிடைக்கிறது. நுழைவாயிலில், கை கழுவ, சானிட்டைசருடன், 'வாஷ்பேசின்' வைத்திருக்கின்றனர்.அருகில், 'என் பெயர் ஜாய்' என்ற தலைப்பில், முக கவசம் அணிந்த ஒரு சிறுமி, 'வணக்கம்! கைகளை சோப்பு போட்டு கழுவுங்கள். கொரோனா தடுப்பு நெறிமுறையை பின்பற்றி, உங்கள் நலன் மற்றும் உங்கள் தொழிலாளர்களது நலனை மேம்படுத்துங்கள்' என, மக்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில், விழிப்புணர்வு பொம்மை வைக்கப்பட்டுள்ளது. எதிர் திசையில், முக கவசம், கையுறை, சானிட்டைசர் விற்கப்படுகிறது.அதை கடந்து, அலுவலகத்துக்குள் சென்றால், ஒரு வட்டத்துக்குள் நிற்கச் சொல்கிறார்கள். அங்குள்ள கேமரா, நமது உடலின் வெப்ப நிலையை 'ஸ்கேன்' செய்கிறது; 100 டிகிரிக்கு மேலிருந்தால், உடனடியாக, அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.100 டிகிரிக்கு கீழிருந்தால் மட்டுமே, அலுவலகத்துக்குள் அனுமதிக்கின்றனர். ஒரே நேரத்தில், சமூக இடைவெளியில், 5 பேரை நிற்க வைத்தும், உடல் வெப்பத்தை பரிசோதிக்கலாம்.இந்நடைமுறை, மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X